Enable Javscript for better performance
வளாகத் தேர்வில் வென்ற  ஒசூர் கல்லூரி மாணவர்களுக்கு பணி ஆணை- Dinamani

சுடச்சுட

    

    வளாகத் தேர்வில் வென்ற  ஒசூர் கல்லூரி மாணவர்களுக்கு பணி ஆணை

    By  ஒசூர்,  |   Published on : 27th March 2014 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒசூர் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரியில் படித்த 530 மாணவர்களுக்கு பணிஆணை வழங்கும் விழா கல்லூரியில் வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
     கல்வி நிறுவன அறங்காவலர் பி.மலர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கிவைத்தார். தலைவர் பி.பெருமாள் தலைமை வகித்தார்.
     சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சென்னை பொலரைஸ் தொழில்நுட்ட நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு.விஜயகுமார் ரங்கராஜு, மாணவர்களுக்கு பணிஆணைகளை வழங்கிப் பேசியது:
     மாணவர்களின் இந்த வெற்றிக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும்தான் காரணம்.
     மாணவர்கள் எந்த வேலையில் சேர்ந்தாலும் அதைச் சொந்தப் பணியாக நினைத்து செய்ய வேண்டும். நேர்முக சிந்தனையால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றார் அவர்.
     விழாவில், கல்லூரிச் செயலாளர் பி.குமார், முதல்வர் எஸ்.சித்ரா, ஒருங்கிணைப்பாளர் தேன்மொழி, கல்லூரி வேலைவாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர் எம்.சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
     இந்தக் கல்லூரியில் பொறியியல் படித்த 530 மாணவர்கள் 25-க்கும் மேற்பட்ட பன்னாட்டு, இந்திய நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai