Enable Javscript for better performance
கிருஷ்ணகிரி அருகே கார் மோதியதில் வியாபாரி சாவு- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி அருகே கார் மோதியதில் வியாபாரி சாவு

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 17th April 2015 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் கால்நடை வியாபாரி புதன்கிழமை உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரியை அடுத்துள்ள பாப்பாரப்பட்டி ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் ரவி (45). கால்நடை வியாபாரியான இவர், தனது இருசக்கர வாகனத்தில் வியாபாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி - குப்பம் சாலையில் புதன்கிழமை சென்றார். அப்போது அருந்ததியர் காலனி அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த ரவியை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அவர் அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து மகாராஜகடை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai