Enable Javscript for better performance
தமிழகத்துக்கு கோழி ஏற்றி வரும் லாரிகள் நுழையத் தடை- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்துக்கு கோழி ஏற்றி வரும் லாரிகள் நுழையத் தடை

    By ஒசூர்,  |   Published on : 17th April 2015 05:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெலங்கானாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலியாக தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் மீது தமிழக எல்லையான ஒசூரில் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது. கோழி மற்றும் முட்டைகள் ஏற்றி வரும் லாரிகள் தமிழகத்தில் நுழையத் தடை விதித்து லாரிகள் திருப்பி அனுப்பப்பட்டன.

    தெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணையொன்றில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு கோழிகள் உயிரிழந்தன. இதையடுத்து கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் அங்கு ஆய்வு செய்தபோது கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் நோய் தாக்கி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் பரவி வரும் பறவைக்காய்ச்சல் நோய் தமிழகத்திற்குள் நுழையாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அங்கிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு வரும் வாகனங்கள் மீது தமிழக எல்லையான ஒசூரில் பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு மருந்து தெளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவின் பேரில் வியாழக்கிழமை தமிழக எல்லையான ஒசூரில் கால்நடை பராமரிப்புத்துறை சோதனைச் சாவடியில் ஒசூர் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உதவி இயக்குநர் ராஜேந்திரன் தலைமையில் நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது.

    உதவி மருத்துவர் சுகந்தி மேற்பார்வையில் மருத்துவ உதவியாளர்கள் தேவராஜ், நாகேஷ் ஆகியோர் ஈடுபட்டனர்.

    தெலங்கானாவில் இருந்து சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களின் டயர் மற்றும் சரக்குகள் மீது குளோரின் டையாக்சைடு மருந்தைத் தெளித்தனர். அங்கிருந்து கோழி, முட்டைகள், கோழித்தீவனங்கள் ஆகியவற்றை ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் லாரிகளைத் தடுத்து நிறுத்தி தமிழகத்திற்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.

    இதுகுறித்து கால்நடை பாரமரிப்புத்துறை உதவி இயக்குநர் ராஜேந்திரன் கூறுயது:

    தெலங்கானா மாநிலத்தில் ரெங்காரெட்டி மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த நோய் தமிழகத்திற்குள் நுழையாதவாறு தடுக்க தமிழக அரசின் உத்தரவின்படி மாநில எல்லையில் வாகனங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. லாரிகள் மீது பறவைக்காய்ச்சல் நோய்த் தடுப்பு மருந்து தெளிக்கப்படுகிறது.

    கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றி வரும் லாரிகள் திருப்பி அனுப்பப்படுகிறது. இந்தப் பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai