Enable Javscript for better performance
தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழ் அமைப்புகள் சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருப்பதி வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்களை செம்மரக்கடத்தல் தடுப்பு தனிப்படை போலீஸார் கடந்த 10 நாள்களுக்கு முன் சுட்டுக்கொன்றனர்.

    இச்சம்பவத்தைக் கண்டித்து ஒசூர் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றத் தலைவர் வசந்தசந்திரன் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில், 20 அப்பாவி தமிழர்களை திட்டமிட்டு படுகொலை செய்த போலீஸார் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்ய வேண்டும். வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள்

    எழுப்பப்பட்டது.

    இதில் வழக்குரைஞர் கதிரவன், மத்திகிரி அருள்தாஸ், திமுக இலக்கிய அணி மாவட்டச் செயலர் எல்லோரா. மணி, திருவள்ளுவர் இலக்கிய மன்றப் பொறுப்பாளர் மூவேந்தன், ஒசூர் தமிழ் சங்க அமைப்பாளர் ராஜு, பெரியார் புலிகள் இயக்க மாநிலத் தலைவர் தென்றல் சரவணன் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பினர், அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai