Enable Javscript for better performance
தருமபுரி, கிருஷ்ணகிரியில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    தருமபுரி, கிருஷ்ணகிரியில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்

    By தருமபுரி/கிருஷ்ணகிரி,  |   Published on : 17th April 2015 05:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் வியாழக்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சத்துணவு ஊழியர்கள் புதன்கிழமை (ஏப்.15) முதல் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் இரண்டாவது நாளாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் டி.மணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி.எம்.நெடுஞ்செழியன், பொருளாளர் கே.ராஜா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

    அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஏ.சேகர், மாவட்டப் பொருளாளர் கே.புகழேந்தி, நுôலகத் துறை மாநிலத் துணைத் தலைவர் எம்.ரமேஷ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

    இதில், சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்க வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.3,500 வழங்க வேண்டும். சத்துணவுத் திட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். உணவு செலவு மானியம் நபர் ஒன்றுக்கு ரூ.5 வீதம் வழங்க வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்கள் எழுப்பப்பட்டன.

    மாற்று ஏற்பாடுகள்: தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில் சத்துணவு வழங்க மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

    பணிக்கு வராமல் பூட்டப்பட்ட சத்துணவு மையத்தின் பூட்டை உடைத்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர் மேற்பார்வையில் சத்துணவு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இதில் தருமபுரி அருகே தேங்காய்மாரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு மையத்தின் பூட்டை உடைத்து பள்ளித் தலைமை ஆசிரியை கமலா மாணவர்களுக்கு சத்துணவை வழங்கினார்.

    கிருஷ்ணகிரியில்...

    கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சின்னப்பன் தலைமை வகித்தார்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் நாகராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஜெயராமன், பல்வேறு தோழமை சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சீனிவாசலு, ஜனார்த்தனம், வெங்கடேசன், பக்தவத்சலம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

    காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai