Enable Javscript for better performance
மணல் கடத்திய 10 பேர் கைது: 3 லாரிகள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக மாநிலத்துக்கு மணல் கடத்திய லாரி உரிமையாளர்கள் உள்பட 10 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். மேலும், 3 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

    தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு மணல் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சிலர் மணலைக் கடத்திச் சென்று வெளி மாநிலங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வழியாக கர்நாடக மாநிலத்துக்கு மணல் கடத்தப்படுவதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் உத்தரவிட்டார்.இந்நிலையில் புதன்கிழமை இரவு பாகலூர் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, அவ் வழியாக வந்த 3 லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில் கர்நாடக மாநிலத்துக்கு மணல் கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரைக் கைது செய்த போலீஸார் மேலும், 3 லாரிகள் மற்றும் 12 யூனிட் மணலையும் பறிமுதல் செய்தனர்.

    இதே போல் மணல் கடத்தலில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 5 லாரி உரிமையாளர்களையும் மத்திகிரி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். கைதான 10 பேரையும் ஒசூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார்

    முன்னிலையில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai