Enable Javscript for better performance
விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

    கும்பகோணத்தைச் சேர்ந்த கல்யாண் மகள் லலிதா (26). இவர் ஒசூர் மூக்கண்டப்பள்ளியில் உள்ள பணி செய்யும் பெண்களுக்கான விடுதியில் தங்கி தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் தன் ஊருக்குச் சென்று வந்த அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை இரவு விடுதியில் திடீரென விஷம் அருந்தி மயங்கிய நிலையில் கிடந்த அவரை, விடுதிக் காப்பாளர் ரமணி ஒசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே லலிதா இறந்தார். இது குறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai