Enable Javscript for better performance
கிருஷ்ணகிரியில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 27th January 2015 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரியில் தி.மு.க. மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட் திமுக சார்பில் வட்டச்சாலை அருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் இ.ஜி.சுகவனம் தலைமை வகித்தார்.

    மாநில மாணவரணிச் செயலர் இள.புகழேந்தி, மாவட்ட அவைத் தலைவர் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ, நகரச் செயலாளர் நவாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் மொழிப் போர் தியாகி தனபால் கௌரவிக்கப்பட்டார்.

    பர்கூரை அடுத்த ஜெகதேவியில், ஒன்றியச் செயலர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், பேச்சாளர் மீனாட்சி சுந்தரம், பெரியாழ்வார் ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பு (எ) சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி:கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை எதிரில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    மாநில துணைப் பொதுச் செயலர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சித் தலைவர் தி.வேல்முருகன் சிறப்புரையாற்றினார்.

    காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை மாவட்டத்தில் உளள அனைத்து கிராமங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும். மீத்தேன் எரிவாயுத் திட்டத்தை, மத்திய அரசு முற்றிலும் கைவிட வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி படேதலாவ் ஏரி கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai