Enable Javscript for better performance
பள்ளிக் கட்டடத்துக்கு பூமி பூஜை- Dinamani

சுடச்சுட

    

    மத்தூர் ஒன்றியத்தில் புதிய தார்ச் சாலை அமைக்கவும், பள்ளிக் கட்டடம் கட்டவும் திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

    ஆனந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டடம், அறிவியல் ஆய்வுக் கூடம், சுற்றுச்சுவர் ஆகியவை நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.86.5 லட்சம் மதிபீட்டில் கட்டப்படவுள்ளன.

    அதேபோல, வாணிப்பட்டி ஊராட்சியில் ரெட்டிப்பட்டியில் இருந்து ஆனந்தூர் வரை 2.1 கி.மீ தொலைவுக்கு ரூ.38 லட்சம் மதிபீட்டில் புதிய தார்ச் சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான பூமி பூஜை கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் கே.அசோக்குமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    இதில், ஊத்தங்கரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் மனோரஞ்சிதம் நாகராஜன், ஆனந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் துரை கோவிந்தராஜன், வாணிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மாதம்மாள் சென்னகேசவன், ஆனந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை பரிமளா, ஒன்றியக் குழு உறுப்பினர் முகிலேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai