Enable Javscript for better performance
ஊத்தங்கரை அருகே  கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    ஊத்தங்கரை அருகே  கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு

    By  ஊத்தங்கரை,  |   Published on : 28th January 2015 02:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள அதியமான் மகளிர் கல்லூரி அருகில் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமானை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
     விவசாயி ராஜ் என்பவரின் கிணற்றில் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்தது.தண்ணீர் பாய்ச்ச நிலத்துக்குச் சென்ற ராஜ், கிணற்றில் புள்ளிமான் தத்தளித்துக் கொண்டிருந்ததைக் கண்டார். இதுகுறித்து ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் விரைந்து வந்து கிணற்றில் தத்தளித்த புள்ளிமானை உயிருடன் மீட்டனர். பின்னர், அந்த மான் ஊத்தங்கரை ஒன்னக்கரை காப்புக் காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai