Enable Javscript for better performance
ஒசூரில் இரு விபத்துகளில் 2 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் இரு வேறு சாலை விபத்துக்களில் இருவர் உயிரிழந்தனர்.
     ஒசூர் நகராட்சி சென்னத்தூரைச் சேர்ந்தவர் முருகேசன் (48). அதே பகுதியைச் சேர்ந்தவர் பாபு (30). இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு ஒசூருக்கு வந்து விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அலசநத்தம் அருகே சென்றபோது, அங்கிருந்த தடுப்பு சுவரில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முருகேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த பாபு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஒசூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     மற்றொரு விபத்து
     பிகார் மாநிலத்தை சேர்ந்த மகத்தூர் மகன் நித்திஸ் பிரசாத் (23). இவர் ஒசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். காலனியில் தங்கி தனியார் தொழில்சாலையில் பணிபுரிந்து வந்தார். இவர் மூக்கண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்றார். அப்போது, பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற தனியார் சொகுசுப் பேருந்து இவர் மீது மோதியது.
     இதில், நிகழ்விடத்திலேயே நித்திஸ் பிரசாத் உயிரிழந்தார். இதுகுறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai