Enable Javscript for better performance
ஒசூர் ராமநாயக்கன் ஏரியை  சீரமைக்கக் கோரி நூதனப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஒசூர் ராமநாயக்கன் ஏரியை  சீரமைக்கக் கோரி நூதனப் போராட்டம்

    By ஒசூர்,  |   Published on : 28th January 2015 02:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் ராமநாயக்கன் ஏரியைச் சீரமைத்து தண்ணீர் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் ஏரியில் திரண்டு நின்று போராட்டம் நடத்தினர்.
     ஒசூர் ராம்நகர் பகுதி, ராமநாயக்கன் ஏரியின் சுற்றுப் பகுதியில் உள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு ராமநாயக்கன் ஏரியில் நின்று செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     தொடர்ந்து, ஏரியின் கரையோரத்தில் மருத்துவமனைக் கழிவு, கோழி, மீன், இறைச்சி கடைகளின் கழிவுகள் கொட்டப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
     மேலும், மருத்துவக் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இந்த ஏரியில் நீர் இருக்கும் போது குடிநீர் பிரச்னை இல்லாமல் இருந்தது. தற்போது ஏரியில் நீர் இல்லாததால் வீடுகளில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நீர் இல்லை. வரும் கோடை காலங்களில் கடுமையான குடிநீர் பிரச்னை ஏற்பட உள்ளது.
     எனவே, ஏரிக்கு நீர் வரும் வகையில், நீரோடைகள், கால்வாய்களைச் சுத்தம் செய்து தர வேண்டும்.
     ராமநாயக்கன் ஏரிக்கு கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீரைக் கொண்டு வந்து நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி, பொதுமக்கள் ஒசூர் கோட்டாட்சியர் ஜோதிலிங்கத்திடம் மனு அளித்தனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai