Enable Javscript for better performance
ஒசூர் வருமான வரி அலுவலகத்தில் சேவை மையம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஒசூர் வருமான வரி அலுவலகத்தில் சேவை மையம் தொடக்கம்

    By  ஒசூர்  |   Published on : 28th January 2015 02:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒசூர் வருமான வரித் துறை அலுவலகத்தில் புதிதாக "ஆய்க்கார் சேவா கேந்திரா' என்ற வருமான வரி சேவை மையம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
     இந்த சேவை மையத்தை திருச்சி முதன்மை வருமான வரித் துறை ஆணையர் பவன்குமார் வாத்ஸ்யாயன் தொடக்கிவைத்தார். பின்னர் அவர் கூறியது.
     வளர்ந்து வரும் தொழில் நகரமான ஒசூரில் அனைத்து விதமான தொழில்சாலைகளும் இயங்கி வருகின்றன. இங்கு தொழிலதிபர்கள், வணிகர்கள், கட்டுமானத் துறையினர் என பல தரப்பினரும் வியாபாரம் செய்து வருகின்றனர். இங்கு தனிநபர் வருமானத்திற்கான வரி மட்டும் இல்லாமல் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களின் வருமான வரி கணக்குகளும் பராமரிக்கப்படுகின்றன.
     எனவே, வரி செலுத்துவதற்கு ஏதுவாக பல்வேறு வசதிகளை மத்திய நிதியமைச்சகம் வாயிலாக வருமான வரித் துறையினர் செயல்படுத்தி வருகின்றனர். இதன்படி, வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைகள், சிரமங்கள் போன்ற பிரச்னைகளைச் சமாளிக்கவும் அதற்கு தீர்வு ஏற்படுத்தவும் இந்தச் சேவை மையம் உதவும். வரி செலுத்தும் வாடிக்கையாளர்கள், கணக்கு தணிக்கையாளர்கள் சேலத்தில் உள்ள சேவை மையத்தை நாடும் நிலை இருந்தது. இதனால், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கான விளக்கங்கள் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. வரி செலுத்துவதில் சிரமம் நிலவுவதாக புகார்கள் எழுந்தன. இந்தச் சிரமங்களைப் போக்கும் வகையிலும், அதிகரித்து வரும் வருமான வரி செலுத்து வோர்களின் குறைகளைத் தீர்க்கவும் செவ்வாய்க்கிழமை முதல் ஒசூர் வருமான வரித் துறை அலுவலகத்தில் புதிதாக "ஆய்க்கார் சேவா கேந்திரா' என்ற வருமான வரி சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது என்றார். இதில், சேலம் வருமான வரித் துறை ஆணையர் பி. அருளப்பா, ஒசூர் அலுவலக அலுவலர்கள் நாகேந்திரன், ராம்சேவக் விஸ்வகர்மா, பட்டயக் கணக்கர்கள் மணி, பாலசுந்தரம், அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai