Enable Javscript for better performance
சாமல்பட்டியில்  குடிநீர் வேண்டி  பொதுமக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    சாமல்பட்டியில்  குடிநீர் வேண்டி  பொதுமக்கள் சாலை மறியல்

    By  போச்சம்பள்ளி,  |   Published on : 28th January 2015 02:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீரான குடிநீர் விநியோகிக்கக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டியில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     மத்தூர் ஒன்றியம், சாமல்பட்டி பகுதி பொதுமக்கள் கடந்த ஒருவாரமாக குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குச் சென்று புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த சாமல்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பத்மாவதி, மத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகரத்தினம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோபி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசப் பேச்சு நடத்தினர். மேலும், உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. பொதுமக்களின் போராட்டத்தால், அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai