Enable Javscript for better performance
நக்ஸலைட் ஆதரவாளர் கொலை வழக்கு:  தலைமறைவாக  இருந்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    நக்ஸலைட் ஆதரவாளர் கொலை வழக்கு:  தலைமறைவாக  இருந்தவர் கைது

    By  ஒசூர்,  |   Published on : 28th January 2015 02:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் நக்ஸலைட் ஆதரவாளர் கொலை வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமûறைவாக இருந்தவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
     தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(எ)குணசீலன் (55). நக்ஸ லைட் ஆதரவாளரான இவர், சி.பி.ஐ.(எம்.எல்) கட்சி மாவட்டச் செயலராக இருந்தார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி தளிக்குச் செல்வதாக மனைவியிடம் கூறி விட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி அவர் கிடைக்காதால் மனைவி தளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்படி, போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், கர்நாடக மாநிலம், மாலூர் அருகே தனியார் தைல தோப்பில் பெட்ரொல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், குணசீலன் உடல் கண்டறியப்பட்டது.
     இந்தக் கொலை வழக்கில் நான்கு பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கில், இரண்டாண்டுகளாகத் தலைமறைவாக இருந்த பாகலூரைச் சேர்ந்த முனியப்பா மகன் ராமச்சந்திரனை (39) தளி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai