Enable Javscript for better performance
மத்திய அரசைக் கண்டித்து  காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அரசைக் கண்டித்து  காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

    By  கிருஷ்ணகிரி,  |   Published on : 28th January 2015 02:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    100 நாள் வேலை திட்டத்தைக் கைவிட முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை தொலைபேசி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் மாவட்டத் தலைவர் எம்.ஆறுமுகசுப்பிரமணி தலைமை வகித்தார்.
     காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கே.டி.ராஜா குமரவேல், பொருளாளர் எம்.அய்யாகண்ணு, தாழ்த்தப்பட்டோர் பிரிவு நிர்வாகிகள் ரகு, சி.தீனதயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தைக் கைவிட முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், கிருஷ்ணகிரி நகரப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொத்தபேட்டை பகுதியில் கொட்டும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai