Enable Javscript for better performance
மளிகைக் கடையில் தீ:  ரூ. 2 லட்சம் பொருள்கள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    மளிகைக் கடையில் தீ:  ரூ. 2 லட்சம் பொருள்கள் சேதம்

    By  போச்சம்பள்ளி,  |   Published on : 28th January 2015 02:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே மளிகைக் கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
     போச்சம்பள்ளி அடுத்த ஜிம்மாண்டியூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் பெரியசாமி (39), சந்தூர் சாலையில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
     இவர் திங்கள்கிழமை வியாபாரம் முடித்து கடையைப் பூட்டிச் சென்றார். செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் கடையில் தீப்பற்றியது.
     இதில் கடைக்குள் இருந்த பொருள்கள் எரிந்து சாம்பலாயின. தகவலறிந்த போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் கு.கந்தசாமி தலைமையிலான தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
     தீயில் சேதமடைந்த பொருள்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இதுகுறித்து போச்சம்பள்ளி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai