Enable Javscript for better performance
ஆட்டோ கவிழ்ந்து இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயம் அடைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.

     வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மல்லிகை தோப்பைச் சேர்ந்தவர் ஜாபர் (45). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் சபிக் அகமது (35) என்பவருடன் கிருஷ்ணகிரி அருகே உள்ள மாதேப்பள்ளி ஆற்றில் மீன் பிடிக்க ஆட்டோவில் வந்தார். பூதிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ நிலைதடுமாறிக் கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த சபிக் அகமது நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

     தகவல் அறிந்த போலீஸார், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த ஜாபரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி, உயிரிழந்த சபிக் அகமதின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai