Enable Javscript for better performance
கிருஷ்ணகிரியில் பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியில் பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு நினைவஞ்சலி

    By கிருஷ்ணகிரி  |   Published on : 15th April 2016 06:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரியில் பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

     1944-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி மும்பை துறைமுகத்தில் வெடிபொருள்கள் ஏற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க முற்பட்ட 66 தீயணைப்புத் துறையினர் உயிரிழந்தனர். உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று தீயணைப்புத் துறையின் சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

    அதன்படி கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின்போது தன் உயிரைத் தியாகம் செய்து பிற உயிர் மற்றும் உடைமைகளைக் காப்பாற்றியவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

     கிருஷ்ணகிரி கோட்ட தீயணைப்பு அலுவலர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி மாவட்ட அலுவலர் ஆனந்த் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

     இந்தநிகழ்ச்சியில் நிலைய அலுவலர்கள் கோவிந்தசாமி, ஜெய்சங்கர், சேகர், முருகன், சுந்தர்ராஜ்,  பெரியசாமி மற்றும் வீரர்கள் பங்கேற்றனர். தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சார்பில் ஏப்ரல் 20-ஆம்தேதி வரையில் தீத்தொண்டு வாரம் கொண்டாடப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai