Enable Javscript for better performance
கிருஷ்ணகிரியில் ஸ்ரீ ராமஜெனன மகோத்சவ விழா இன்று தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியில் ஸ்ரீ ராமஜெனன மகோத்சவ விழா இன்று தொடக்கம்

    By கிருஷ்ணகிரி  |   Published on : 15th April 2016 06:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரியில் ஸ்ரீ ராமஜெனன மகோத்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. 

     கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள ஸ்ரீ சீதாராம, ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஸமேத ஸ்ரீஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் மிருத்திகா பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராமஜெனன மகோத்சவ விழா நடைபெறுகிறது.

     ஏப்.15-ஆம் தேதி காலை 8 மணிக்கு ஸ்ரீ கணேஷ ஹோமம், ஸ்ரீ நவக்கிரஹ ஹோமம் மற்றும் கலசஸ்தாபனத்துடன் ஸ்ரீ ராமநவமி உற்சவம் தொடங்குகிறது.  இரவு 7 மணிக்கு ஒசூர் மஹன்ய ஸ்ரீயின் பக்தி இன்னிசைக் கச்சேரி நடைபெறுகிறது.

     16-ஆம் தேதி மாலை 7 மணிக்கு கோபி கலை இளமணி முகுந்தனின் கர்நாடக இன்னிசை கச்சேரியும், 17-ஆம் தேதி காலை 8 மணிக்கு பாப்பாரப்பட்டி அக்ரஹாரம் ஹரே ஸ்ரீனிவாசா ஸ்ரீமன் ஆனந்த தீர்த்த பஜனா மண்டலியினரால் உஞ்சவிருத்தி நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சென்னை கார்த்திக்கின் கர்நாடக இன்னிசைக் கச்சேரியும் நடைபெறுகிறது.

     ஏப். 18 முதல் 22-ஆம் தேதி வரையில் பாப்பாரப்பட்டி பாலாஜி ஷர்மாவின் தொடர் சொற்பொழிவு நடைபெறுகிறது.

     18-ஆம் தேதி மாலை 7 மணிக்கு ஸ்ரீ ராம ஜனனம் நிகழ்ச்சியும், 19-ஆம் தேதி மாலை 7 மணிக்கு ஸ்ரீ சீதா கல்யாணமும், 20-ஆம் தேதி மாலை 7 மணிக்கு ஸ்ரீ சுந்தரகாண்டம் நிகழ்ச்சியும், 21-ஆம் தேதி மாலை 7 மணிக்கு ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகமும், 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீ ஹரிவம்சமும் நடைபெறுகிறது.

     மாலை 6 மணிக்கு ஸ்ரீ சீதா திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 23-ஆம் தேதி மாலை 7 மணிக்கு சென்னை குருபிரகாஷின் பக்தி இன்னிசை கச்சேரியும்,  24-ஆம் தேதி காலை  8 மணிக்கு ஸ்ரீ பூவராகவ மற்றம் ஸ்ரீ ஹயக்ரீவ ஹோமங்கள், காலை 11 மணிக்கு ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம், மாலை 6 மணிக்கு சுவாமி ஊர்வலம் நடைபெறுகிறது.

     ஏப். 25-ஆம் தேதி மாலை 7 மணிக்கு கிருஷ்ணகிரி பழையபேட்டை ஆர்ய வைஸ்ய மகளிரணியினரின் பக்தி பஜன் நிகழ்ச்சியும், மாலை 8 மணிக்கு சயன உற்சவம் நடைபெறுகிறது. 26-ஆம் தேதி காலை 7 மணிக்கு வசந்த உற்சவம், மாலை 7 மணிக்கு 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் குத்து விளக்குப் பூஜையும், மாலை 8.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.

     27-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவமும், மாலை 7 மணிக்கு கிருஷ்ணகிரி ஸ்ரீ வீர ஆஞ்சநேய பஜனா மண்டலியினரின் பக்தி பஜன் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 28-ஆம் தேதி காலை 8 மணிக்கு ஸ்ரீ ராகவேந்திரர் உற்சவம், மாலை 6.30 மணிக்கு பிரகலாதராயர் உற்சவமும், மாலை 7 மணிக்கு கிருஷ்ணகிரி ஸ்ரீ விக்ஞான நிதி தீர்த்த பஜனா மண்டலியினரின் பக்தி பஜன் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

     இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம ஆஞ்சநேய சேவா சமிதி டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai