Enable Javscript for better performance
தேன்கனிக்கோட்டையில் சாலையில் நின்ற யானைகளால் போக்குவரத்துப் பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தேன்கனிக்கோட்டையில் சாலையில் நின்ற யானைகளால் போக்குவரத்துப் பாதிப்பு

    By ஒசூர்  |   Published on : 15th April 2016 06:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேன்கனிக்கோட்டை அருகே சாலையில் நின்ற யானைகளால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

     கர்நாடக மாநிலத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டிருந்தன. இவை அனைத்தையும் ஒசூர் கோட்ட வனத்துறையினர் கடந்த மாதம் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டினர். அதில் 5 யானைகள் மட்டும் பிரிந்து ஒசூர் போடூர்ப்பள்ளம் அருகே 3 நாள்களாக முகாமிட்டிருந்தன.

     இந்த யானைகள் போடூர், ஆழியாளம், கோபசந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சுற்றி வருகின்றன. தென்பெண்ணை ஆறு அருகே விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள முட்டை கோஸ், கேரட், வாழை ஆகியவற்றை மிதித்தும், தின்றும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

     இந்நிலையில் தேன்கனிக்கோட்டையில் மரகட்டா கிராமத்திற்கு வியாழக்கிழமை அரசுப் பேருந்து சென்றபோது சாலையில் யானைகள் நின்றதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

     பின்னர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் யானையை காட்டுக்குள் விரட்டினர். பின்னர் போக்குவரத்து சீரடைந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் தேன்கனிக்கோட்டை மரகட்டா செல்லும் சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai