Enable Javscript for better performance
தொகுதி அறிமுகம்: வேப்பனஅள்ளி- Dinamani

சுடச்சுட

    

    வேப்பனஅள்ளி  தொகுதி.

    தொகுதியின் பெயர்  : வேப்பனஅள்ளி.

    தொகுதியின் எண்:  54.

    எல்லைகள்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கடந்த 2011-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு வரையில் 5 தொகுதிகளைக் கொண்டிருந்தன. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டதில் உருவான தொகுதி வேப்பனஅள்ளி தொகுதியாகும். ஆந்திரம், கர்நாடக மாநிலங்களையும், தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, தளி, ஒசூர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளை எல்லையாகக் கொண்டுள்ளது. அதிக வனப் பகுதிகளை கொண்ட தொகுதியாகும்.

    தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:

     கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஒசூர் என 3 வட்டங்களை உள்ளடக்கிய தொகுதியாகும். இந்த தொகுதியில் உள்ள ராயக்கோட்டை வளர்ந்து வரும் நகரமாகத் திகழ்கிறது. இந்தத் தொகுதியில் உள்ள வருவாய் கிராமங்கள் உத்தனப்பள்ளி, செங்கோடசின்னஅள்ளி, அயானப்பள்ளி, ஊடேதுர்க்கம், சானமாவு, ராயக்கோட்டை, சாமனப்பள்ளி, சூலிகுண்டா, துப்புகானப்பள்ளி, திம்ஜேப்பள்ளி, உலகம், நாகமங்கலம், தியானதுர்க்கம், பி. அக்ரஹாரம், உல்லட்டி, கருக்கனஅள்ளி, காமன்தொட்டி, முத்தனஅள்ளி, பாத்தகோட்டா, ஒடையாண்டஅள்ளி, அட்டகுறுக்கி, நெல்லூர், சூளகிரி, வேப்பனஅள்ளி, இம்மிநாயக்கனப்பள்ளி, இனாம்குட்டப்பள்ளி, நல்லகானகொத்தப்பள்ளி, நாடுவனப்பள்ளி, சென்னப்பள்ளி, சிகரமாகனப்பள்ளி, மருதாண்டப்பள்ளி, நாச்சிகுப்பம், ஏனுசோனை,

     கெங்கமடுகு, பஸ்தலப்பள்ளி, மனவாரனப்பள்ளி, மாரண்டப்பள்ளி, பதிமடுகு, மேலுமலை, பாலனப்பள்ளி, அங்கொண்டப்பள்ளி,  தீர்த்தம், பட்டாகுருபரப்பள்ளி, நேரலகிரி, செம்பரசனப்பள்ளி,  கங்கோஜிகொத்தூர், தோரப்பள்ளி, அலேகுந்தாணி, ஒசஅள்ளி, தியாகராசனப்பள்ளி, குருபரப்பள்ளி, ஏ.செட்டிப்பள்ளி, பீமாண்டப்பள்ளி, காளிங்காவரம், சென்னசந்திரம், பேரிகை, மாரசந்திரம், பி.குருபரப்பள்ளி, வி.மாதேப்பள்ளி, காட்டிநாயக்கன்தொட்டி, கோடிப்பள்ளி, அமுதுகொண்டப்பள்ளி, பில்லனகுப்பம், பி.எஸ்.திம்மசந்திரம், குந்தாரப்பள்ளி, பன்னப்பள்ளி, போலுப்பள்ளி, அத்திமுகம், நாரலப்பள்ளி, மிடிதேப்பள்ளி, கோதிகுட்லப்பள்ளி, பெத்தனப்பள்ளி, சின்னாரன்தொட்டி, கல்லுகுறிக்கி, செலுவன்தொட்டி, கும்பளம், சொக்காபுரம், புக்கசாகரம், வெங்கடேஷ்புரம், பெத்தசிகரலப்பள்ளி.

    சிறப்புகள்:

    ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தொகுதியான குப்பம் தொகுதி அருகே அமைந்துள்ளது வேப்பனஅள்ளி தொகுதி. கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள இந்த தொகுதியானது நகராட்சி, பேரூராட்சி என நகர்ப்புறங்களே இல்லாதது குறிப்பிடத்தக்கது.

     வேப்பனஅள்ளி தொகுதியானது வேப்பனப்பள்ளி, சூளகிரி, கெலமங்கலம், கிருஷ்ணகிரி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது. வேப்பனஅள்ளி ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளும், சூளகிரி ஒன்றியத்தில் 36 ஊராட்சிகளும், கெலமங்கலம் ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளும், கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 3 ஊராட்சிகள் என மொத்தம் 73 ஊராட்சிகள் என முழுக்க முழுக்க கிராம ஊராட்சிகளைக் கொண்ட தொகுதியாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது என 4 மொழிகள் பேசும் மக்கள் சரிசமமாக உள்ளனர்.

    இதுவரை நடைபெற்ற தேர்தல்கள்:

    2011-ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்புக்குப் பிறகு உருவான இந்த வேப்பனஅள்ளி தொகுதியில் இதுவரை ஒரு சட்டப் பேரவைத் தேர்தல் மட்டுமே நடைபெற்றுள்ளது. தற்போது நடைபெற இருப்பது இரண்டாவது தேர்தல் ஆகும்.

    கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் டிசெங்குட்டுவன் 71,471 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேமுதிக வேட்பாளர் முருகேசன் 63,867 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

    மொத்த வாக்குச் சாவடிகள்:

    293 வாக்குச் சாவடிகள்.

    வாக்காளர்களின் எண்ணிக்கை:

    ஆண்கள்     : --------------------1,16,414.

    பெண்கள்    : ------------------- 1,10,513.

    முன்றாம் பாலினத்தவர்கள்: -------------10.

    மொத்தம் வாக்காளர்கள்   :--------2,26,937.

    தேர்தல் நடத்தும் அலுவலரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்: 

    ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர். தொலைபேசி எண்: 9445000396. பேக்ஸ் : 04343 - 236733.

    2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள்:

    ப. செங்குட்டுவன், (தி.மு.க)-71,471 வாக்குகள். முருகேசன் (தே.மு.தி.க) - 63,867 வாக்குகள்,  ய. ரங்கநாதன் (யு.எம்.கே) - 8,434 வாக்குகள், ய.ந. பிரேமநாதன் (பா.ஜ.க.) - 5,035 வாக்குகள், ச.ய. கல்யாணி (சுயேச்சை) 4,766 வாக்குகள், இ.க. சூரியா பிரகாஷ்(பி.எஸ்.பி) - 2,732 வாக்குகள், ந.ஆ. அப்பாஸ் (சுயேச்சை) - 1,690 வாக்குகள், மொத்தம் பதிவான வாக்குகள் 1,58,504 வாக்குகள்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai