Enable Javscript for better performance
வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    தளி தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது.

    மாவட்டத் தேர்தல் மேற்பார்வையாளர் நரேந்திர திவாரி, வட்டாட்சியர் தமீம் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர். இந்தப் பேரணி தேன்கனிக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. அனைவரும் வாக்களிக்க வேண்டும். வாக்குகளை விற்பனை செய்யக் கூடாது என்ற பதாகைகளை பேரணியில் சென்றவர்கள் கையில் ஏந்திச் சென்றனர்.

     நடைபெறவுள்ள தேர்தலில் 100 சதவிகித வாக்குகள் பதிவாக வேண்டும் என விழிப்புணர்வுப் பேரணியில் சென்றவர்கள் முழக்கம் எழுப்பிவாறு சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai