Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணம் திருட்டு

    By போச்சம்பள்ளி  |   Published on : 15th April 2016 06:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகரசம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.

     நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்த சக்கரை மகன் பிரகாசம் (53), சலவைத் தொழிலாளி.  கோடை காலம் என்பதால்  குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு மாடியில் படுத்து தூங்கினாராம்.

     புதன்கிழமை காலை விழித்துப் பார்த்த போது மர்ம நபர்கள் பிரகாசத்தின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 7.4 சவரன் தங்க நகை, ரூ.3 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை திருடி சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரகாசம் நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் புதன்கிழமை  புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai