உலக மக்கள்தொகை தின கருத்தரங்கு

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற உலக மக்கள்தொகை தின கருத்தரங்கை மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி தொடங்கிவைத்தார்.

கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற உலக மக்கள்தொகை தின கருத்தரங்கை மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி தொடங்கிவைத்தார்.

மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமை வகித்தார். எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கிருஷ்ணகிரி நகர்மன்றத் தலைவர் தங்கமுத்து, மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை இயக்குநர் சி.முல்லை சாரதி, அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சௌ.கீதா, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் ஆ.தமிழ்வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி பேசியது:

பெண்களின் வளர்ச்சிக்கு முதல்வர்

ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமுதாயம் முன்னேற்றமடைய பெண் கல்வி அவசியம். குறிப்பாக இளம் வயது திருமணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com