Enable Javscript for better performance
கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையம்: தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையம்: தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு

    By dn  |   Published on : 15th May 2016 06:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி அரசு பல்தொழில் நுட்பக் கல்லூரி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு மையத்தை தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான பதிவான வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பல்தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் மே 19-ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்த மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ள அறைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவற்றை தேர்தல் பொது பார்வையாளர்கள் என்.பி.எஸ்.ராஜ்புத்,  ஷாம்லா இக்பால், கேடார்நாத், காவல் பார்வையாளர் மணிஷ்சங்கர் சர்மா ஆகியோர் பார்வையிட்டனர்.

     மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சி.கதிரவன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.திருநாவுக்கரசு ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai