Enable Javscript for better performance
சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு- Dinamani

சுடச்சுட

    

    சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு

    By dn  |   Published on : 15th May 2016 06:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பர்கூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் உள்பட 8 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பேருந்து நிலையம் அருகே சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் தாமோதரன் யாதவ் தனது கட்சி வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார்.  அப்போது அந்தபகுதியில் பா.ஜ.க.-வினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனராம். இதையடுத்து இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

    இந்த நிலையில் பா.ஜ.க-வினரைக் கண்டித்து சமாஜ்வாடி கட்சியினர் திடீர் சாலைமறையலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீஸார், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் பர்கூர் கிராம நிர்வாக அலுவலர் தனகோட்டி அளித்த புகாரின் பேரில் மறியலில் ஈடுபட்ட சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த மாநிலத் தலைவர் தாமோதரயாதவ், வேட்பாளர் அன்பழகன் மற்றும் கட்சி தொண்டர்கள் உள்பட 8 பேர் மீது பர்கூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai