Enable Javscript for better performance
சுற்றுச் சுவர் மீது வேன் மேதியதில் தகராறு: தம்பதி கைது- Dinamani

சுடச்சுட

    

    வீட்டின் சுற்றுச் சுவர் மீது வேன் மோதியதில் ஏற்பட்ட தகராறில் தம்பதியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

    கிரருஷ்ணகிரி அருகேயுள்ள பாறையூரைச் சேர்ந்தவர் எல்லப்பனின் மனைவி விஜயா(36). இவரது வீட்டின் சுற்றுச் சுவர் மீது அதைப் பகுதியைச் சேர்ந்த தருமன்(எ)முருகன்(43)  என்பவரின் வேன் மோதியதாம். இதையடுத்து தருமனை விஜயா கண்டித்தாராம். இதனால் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தருமன், அவரது மனைவி சாவித்திரு ஆகிய இருவரும் விஜயாவை தகாத வார்த்தைகளால் திட்டினார்களாம்.

    இதையடுத்து விஜயா அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து, தர்மன், சாவித்திரி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai