Enable Javscript for better performance
கிருஷ்ணகிரியில் கூட்டுறவு வார விழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரியில் கூட்டுறவு வார விழா தொடக்கம்

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 15th November 2016 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 63-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
     கூட்டுறவு வார விழா தொடக்க நிகழ்ச்சி தருமபுரி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கிருஷ்ணகிரி நகரக் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மண்டல இணைப் பதிவாளர் பாண்டியன், கிருஷ்ணகிரி சரக துணைப் பதிவாளர் பாலமுருகன், ஒசூர் சரக துணைப் பதிவாளர் சுப்பிரமணியன், பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளர் ரவிச்சந்திரன், நகரக் கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் ராதாகிருஷ்ணன், தருமபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் நாராயணன், கூட்டுறவுத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
     கூட்டுறவு வாரவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை (நவ.15) உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம், கூட்டுறவு வாயிலாக திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் வளர்ச்சி பற்றியக் கருத்தரங்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் நடைபெறுகிறது.
     நவ.16-இல் கிருஷ்ணகிரி நகரக் கூட்டுறவு வங்கி தவுலதாபாத் கிளையில், கூட்டுறவுகளின் வாயிலாக நிதி வகை உள்படுத்தல் குறித்த கருத்தரங்கு நடைபெறுகிறது. இதில் ஓய்வுபெற்ற கூடுதல் பதிவாளர் சிவாஜி பேசுகிறார். 17-ஆம் தேதி கெலமங்கலம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க வளாகத்தில் மரக்கன்று நடும் விழா, மத்திகிரி கால்நடை பண்ணையில் கால்நடை மருத்துவ முகாம் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
     19-ஆம் தேதி காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம், 20-ஆம் தேதி மாவட்ட அளவிலான நிறைவு விழா ஒசூர் பாகலூர் சாலையில் உள்ள ஜி.மங்கலம் ஏசியன் கிருஷ்டியன் பள்ளியில் மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கூட்டுறவுகள் வாயிலாக நல்ல நிர்வாகம், மதிப்பு, தலைமைப் பண்புகள் அளித்தல் என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai