Enable Javscript for better performance
திருமணமாகி 2 மாதங்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    திருமணமாகி 2 மாதங்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

    By ஊத்தங்கரை,  |   Published on : 17th November 2016 08:00 AM  |   அ+அ அ-   |  

    ஊத்தங்கரை அருகே திருமணமாகி 2 மாதங்களில் புது மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
     கருவானூரைச் சேர்ந்தவர் ஞானமூர்த்தி. விவசாயி, இவருக்கும் கல்லாவியை அடுத்த பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகள் விஜயலட்சுமிக்கும் (24) கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், தனது தாய் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்ற விஜயலட்சுமி அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
     தகவல் அறிந்ததும் நிகழ்விடத்துக்கு வந்த கல்லாவி போலீஸார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்தனர். திருமணமாகி 2 மாதங்களில் தற்கொலை செய்து கொண்டதால் கிருஷ்ணகிரி வருவாய்க் கோட்டாட்சியர் முகமது அஸ்லாம் விசாரணை நடத்தி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai