Enable Javscript for better performance
ஒசூரில் அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டம்: அரசு முதன்மைச் செயலர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் அனைத்துத் துறை ஆய்வுக் கூட்டம்: அரசு முதன்மைச் செயலர் பங்கேற்பு

    By ஒசூர்,  |   Published on : 28th November 2016 08:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒசூரில் அனைத்து அரசுத் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
     ஒசூர் சார்- ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிக துறை, கூட்டுறவுத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, குடிநீர் வடிகால் வாரியம், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர்த் திட்டம், வனத் துறை, வருவாய்த் துறை உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
     இதற்கு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அரசின் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசின் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா பேசியது:
     தமிழக முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். மாவட்ட விவசாயிகள் அனைவரும் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெற வேண்டும். பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான விவரங்களுக்கு அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகுமாறு வேளாண்மை துறை அலுவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
     தோட்டக்கலைத் துறையின் தோட்டக்கலை இயக்க திட்டத்தில் மா மற்றும் மலர்கள், காய்கறி சாகுபடிக்கு தமிழக அரசால் அதிக மானியம் வழங்கப்படுகிறது. விளைச்சல் அறுவடைக்கு பிறகு ஏற்படும் இழப்புகளை தவிர்க்கத் தேவையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றார். முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, சூடகொண்டப்பள்ளி, எஸ்.முதுகானப்பள்ளி, பி.செட்டிப்பள்ளி பகுதியில் ராகி, அவரை மற்றும் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
     கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்டி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் நரசிம்மன், மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், வேளாண்மை துறை இணை இயக்குனர் சங்கரன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பாண்டியன், கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் விஜயகுமாரன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் மாலா, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் சீனிவாசன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai