Enable Javscript for better performance
மகளிர் சுய உதவிக்குழுக் கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மகளிர் சுய உதவிக்குழுக் கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

    By ஊத்தங்கரை,  |   Published on : 28th November 2016 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊத்தங்கரையை அடுத்த வீராட்சிக்குப்பம் கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக் கட்டடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மகளிர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     வீராட்சிகுப்பம் கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
     மகளிர் பயன்பெரும் வகையில் அங்கு 2003-2004-ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
     மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த இந்தக் கட்டடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டு பயன்பாடின்றி ஒதுக்கப்பட்டது.
     தற்போது இந்தக் கட்டடம் சமூக விரோத செயல்கள் நடைபெறும் கூடாரமாக மாறிவிட்டது. அரசு நிதி செலவில் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தை மீண்டும் திறக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai