Enable Javscript for better performance
மணல் கடத்தல்: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காவேரிப்பட்டணம் வழியாக கர்நாடகத்துக்கு மணல் கடத்திய லாரிகளைப் பறிமுதல் செய்த போலீஸார் அதன் ஓட்டுநர்களைக் கைது செய்தனர்.
     கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸார் திம்மாபுரம் அருகே வாகனத் தணிக்கையில் சனிக்கிழமை ஈடுபட்டனர். அப்போது, கரூரிலிருந்து கர்நாடகத்துக்கு 2 லாரிகளில் மணல் கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து, லாரிகளை பறிமுதல் செய்த போலீஸார், ஓட்டுநர்களான முசிறியைச் சேர்ந்த சரவணன்(24), நாமக்கல்லைச் சேர்ந்த சிவக்குமார்(45) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai