Enable Javscript for better performance
ரூ.4.43 கோடியில் வளர்ச்சிப் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.4 கோடியே 43 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பில் 11 தார்ச்சாலைகள், 2 பூங்காக்கள் அமைக்கும் பணிகளை கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி தொடங்கிவைத்தார்.
     ஒசூர் நகராட்சி வார்டு எண் 9-இல் ஆவலப்பள்ளி அட்கோ பகுதியில் உள்ள பூங்கா ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு பணிகள் நடைபெறுகின்றன. ஒசூர் நகராட்சி பிருந்தாவன் நகரில் உள்ள பூங்கா ரூ.42 லட்சம் செலவில் மேம்படுத்தப்படுகிறது.
     இதேபோல பேரிகை சாலை முதல் சத்தியமங்கலம் வரை, தேவிசெட்டிப்பள்ளி முதல் சூடகானப்பள்ளி வரையிலும், நந்திமங்கலம் முசஸ் கட்டிகானப்பள்ளி வரையிலும், முத்தாலி முதல் கொத்தூர் வரையிலும், முத்தாலி முதல் பெத்தகொள்ளு வரையிலும், எஸ்.முதுகானப்பள்ளி முதல் ஒட்டர்பாளையம் வரையிலும், தொரப்பள்ளி முதல் கொல்லப்பள்ளி வரையிலும், ஓ.காரப்பள்ளி முதல் ஜொனபண்டா, பாகலூர் சாலை முதல் வெங்கடராயபுரம் வரையிலும், தேன்கனிக்கோட்டை சாலை முதல் டி.பாரந்தூர் வரையிலும், தொரப்பள்ளி முதல் ராஜாபுரம் வரை மொத்தம் 11 தார்ச்சாலை பணிகள், 2 பூங்காக்கள் சீரமைக்கும் பணி ரூ.4 கோடியே 43 லட்சத்து 53 ஆயிரத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
     அமைச்சர் பி.பாலகிருஷ்ணா ரெட்டி திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தார். முன்னதாக ஒசூர் நகராட்சியில் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை அவர் தொடங்கிவைத்தார்.
     நகராட்சி ஆணையாளர் பாலகிருஷ்ணன், தருமபுரி மாவட்ட ஒன்றிய கூட்டுறவுச் சங்க தலைவர் நாராயணன், ஒசூர் முன்னாள் நகராட்சித் தலைவர் ராமு, பாகலூர் கூட்டுறவுச் சங்க தலைவர் வி.டி. ஜெயராமன், உதவிப் பொறியாளர்கள் கெளரி, ஒன்றிய ஆணையாளர்கள் அசோகன், சென்னகிருஷ்ணன், முன்னாள் சூளகிரி ஒன்றிய குழு தலைவர் மது(எ)ஹேம்நாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai