Enable Javscript for better performance
அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள்- Dinamani

சுடச்சுட

    

    அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள்

    By DIN  |   Published on : 08th October 2016 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில், வெள்ளிக்கிழமை வெளியான செய்தி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, பர்கூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ஒசூர் ஆகிய 7 வட்டாட்சியர் அலுவலகங்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஆகியவற்றில் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் ஆதார் புகைப்படம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு விடுமுறை நாள்கள் தவிர அனைத்து நாள்களிலும் இந்த மையங்கள் செயல்படும்.
    இதுவரையில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்காதவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களுக்கு சென்று, தங்களுடைய முகவரி சான்று, அடையாள சான்று ஆகியவற்றை சமர்ப்பித்து, கிராம நிர்வாக அலுவலரிடம் தேசிய கணக்கெடுப்பு (என்ஆர்பி) படிவத்தில் கையொப்பம் பெற்று இலவசமாக எவ்வித கட்டணமும் செலுத்தாமல் ஆதார் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.
    இதே போல், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இயக்கும் அரசு பொது இ-சேவை மையங்களில் தற்போது ரூ.25 செலுத்தி வண்ண வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai