Enable Javscript for better performance
அன்னை தெரசாவுக்கு புகழஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    புனிதர் பட்டம் பெற்ற அன்னை தெரசாவுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
    கிருஷ்ணகிரியில் அரசு நிதியுதவி பெறும் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புனிதர் பட்டம் பெற்ற அன்னை தெரசாவுக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தருமபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கலையரசி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் அகமதுபாஷா, மல்லிகா, மாவட்ட உடல்கல்வி ஆய்வளர் வளர்மதி, மாவட்ட கல்வி ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    முன்னதாக, அன்னை தெரசாவின் சிலைக்கு அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியின் போது மாணவ, மாணவியர் அன்னை தெரசா போல் எளிமையும், கருணையுடனும் இருக்க வேண்டும் என உறுதி ஏற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai