Enable Javscript for better performance
கல்லூரி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பெரியார் பல்கலைக்கழக அளவிலான ஆணழகன் போட்டியில், கிருஷ்ணகிரி சிவகாமியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
    இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியான செய்தி: பெரியார் பல்கலைக்கழக அளவிலான பளுதூக்கும் மற்றும் ஆணழகன் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் 65 கிலோ எடை பிரிவு ஆணழகன் போட்டியில் கிருஷ்ணகிரி சிவகாமியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கணினி பயன்பாட்டியல் துறை மாணவர் மு.சந்தோஷ் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். பதக்கம் வென்ற மாணவரை கல்லூரியின் தாளாளர் குமரன், உடல்கல்வி பேராசிரியர், பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.


    இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஒசூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்தில், காவிரி நதிநீர் விஷயத்தில் தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகத்தைக் கண்டித்தும், தமிழக வாகனங்கள் கர்நாடகாவில் சேதப்படுத்தப்பட்டதற்கு உரிய நஷ்டஈடு வழங்கக் கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
    கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் பால்ராஜ், மாவட்டச் செயலர் லோகேஷ், நிர்வாகி அரீஷ், மாநில அமைப்புக்குழு தலைவர் பொன்னுசாமி, நகரத் தலைவர் ஜெய், கோட்டத் தலைவர் சீனிவாசன், தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் நிர்வாகிகள் நரசிம்மா, பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    இதுகுறித்து தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்க கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. தமிழக வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். சேதப்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு கர்நாடக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி நதிநீர் விஷயத்தில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இது ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. மத்திய அரசு அந்த மனுவை உடனடியாக வாபஸ் பெற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்.10-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai