Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சி வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சி வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 08th October 2016 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    மாவட்டச் செயலர் லியாகத் பாஷா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டப் பொருளர் சிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முஸ்லிம்களின் மத வழிபாட்டு உரிமையை மீட்க தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி தொடர்பாக இரண்டு மாநில பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு அமைதியை நிலை நாட்ட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
    கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு மத்திய அரசில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள மூன்றரை சதவீத இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவதாக அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai