Enable Javscript for better performance
நிலத்தகராறில் 6 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பர்கூர் அருகே நிலத்தகராறில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை அடுத்த சின்னபர்கூர் சென்னப்பசெட்டி தெருவைச் சேர்ந்தவர் சின்னசாமி (60). அதே பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (48). இவர்கள் இருவருக்குமிடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்ததாம். இதையடுத்து, இவர்களுக்கு இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படுமாம்.
    இந்த நிலையில், இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனராம்.
    இதுகுறித்து இருத்தரப்பினரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில், பர்கூர் போலீஸார் வழக்குப் பதிந்து, சின்னசாமி அளித்த புகாரின் பேரில் முருகேசன், காஞ்சனா (45), திருமலைவாசன் (22) ஆகியோரையும், முருகேசன் அளித்த புகாரின் பேரில் சின்னசாமி, கார்த்திக் (29), வெண்ணிலா (49) ஆகியோரையும் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai