Enable Javscript for better performance
போச்சம்பள்ளி அருகே பெண்கள் சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?- Dinamani

சுடச்சுட

    

    போச்சம்பள்ளி அருகே பெண்கள் சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?

    By DIN  |   Published on : 08th October 2016 03:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போச்சம்பள்ளி அருகே பயன்பாடின்றி உள்ள பெண்கள் சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சி, போச்சம்பள்ளி அருகேயுள்ள பனங்காட்டூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் ஒருங்கிணைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் சுகாதார வளாகம் 2011-2012-ஆம் ஆண்டு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்துக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றின் மின் மோட்டார் பழுதடைந்து நீரேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
    இதனால், சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதார வளாகம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவராமல் சிதிலமடைந்தும், துர்நாற்றம் வீசியும் சுகதார சீர்கேடு ஏற்பட்டு நோய்கள் பரவும் நிலையில் உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
    இதுகுறித்து பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், ஊராட்சி மன்றத் தலைவரிடமும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
    எனவே, பழுதடைந்துள்ள மின் மோட்டாரை பழுது நீக்கம் செய்து நீரேற்றி, பயன்பாடின்றி உள்ள சுகாதார வளாகத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai