Enable Javscript for better performance
அக்.17-இல் ரயில் மறியல் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அக்.17-இல் ரயில் மறியல் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

    By ஒசூர்/தருமபுரி,  |   Published on : 15th October 2016 11:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி நீர்ப் பங்கீட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி, அக்.17-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என தமிழக விவசாயிகள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
     தமிழக விவசாயிகள் சங்க உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்டப் பொருளர் அசோக்குமார் தலைமையில் கிருஷ்ணகிரியில் உள்ள சங்க அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டப் பொருளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலர் ராஜா, நிர்வாகிகள் ராமப்பா, கோவிந்தராஜ், ஜெயபால், நஞ்சுண்டன், சின்னசாமி, சீனிவாசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
     கூட்டத்தில் மாநிலத் தலைவர் கே.எம்.ராமகவுண்டர் கலந்துகொண்டு பேசியது: கர்நாடக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை சட்டப்படி தராமல் இருக்கிறது. மேலும், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் உடமைகளை அடித்து நொறுக்கி வாழ்வாதாரத்தை அழித்துள்ளனர். இதனால், ஒரு கோடி தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உண்டான இழப்பை மத்திய அரசும், கர்நாடக அரசும் வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் காவிரி நீர்ப் பங்கீட்டுக் குழு அமைத்து முறையாக சரியான அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அக்.17-ஆம் தேதி திங்கள்கிழமை ராயக்கோட்டை, ஒசூர், சாமல்பட்டி ரயில் நிலையங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
     மேலும், ஜனாதிபதியை சந்திப்பது என்றும், 10 லட்சம் உழவர்கள் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
     கூட்டத்தில் நதிநீர்ப் பங்கீட்டு உயர் மட்டக் குழுவை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     தருமபுரியில்....
     இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.தேவராசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மதிமுக மாவட்டச் செயலர் அ.தங்கராசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டலச் செயலர் பொ.மு.நந்தன், மேற்கு மாவட்டச் செயலர் த.ஜெயந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.மல்லையன், இரா.சிசுபாலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலர் ஜெ.பிரதாபன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சின்னசாமி, இ.பி.புகழேந்தி உள்ளிட்டோர் பேசினர்.
     இதில், விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் மறியல் போராட்டத்துக்கு மக்கள் நலக் கூட்டணி முழு ஆதரவு அளிக்கிறது. இதையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் அக். 17, 18 தேதிகளில் தருமபுரி மற்றும் மொரப்பூர் ரயில் நிலையங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai