Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து முற்றுகை: 29 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து முற்றுகை: 29 பேர் கைது

    By ஒசூர்,  |   Published on : 15th October 2016 11:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து ஒசூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரை போலீஸார் கைது செய்தனர்.
     காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்தும், காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்யும் மத்திய அரசையும், கர்நாடக மாநில அரசையும் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஒசூரில் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
     ஒசூர் காந்தி சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஷாநவாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் வாஜித்பாஷா, பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவர் ஏஜாஸ், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகரத் தலைவர் சவுகத் அகமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
     இதில் மத்திய அரசையும், கர்நாடக மாநில அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒசூர் நகர ஆய்வாளர் ராஜாசோமசுந்தரம் தலைமையிலான போலீஸார், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரை கைது செய்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai