Enable Javscript for better performance
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலத்துக்கு அனுப்பி வைப்பு- Dinamani

சுடச்சுட

    

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலத்துக்கு அனுப்பி வைப்பு

    By ஒசூர்,  |   Published on : 15th October 2016 11:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரியில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
     இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள பழுதடைந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் பழுதுகள் நீக்கப்பட உள்ளன. இதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொது பாதுகாப்பு அறையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஒப்படைக்கப்படுகின்றன.
     இதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிருஷ்ணகிரி உதவி ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு அறைகள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. பிறகு அங்கு வைக்கப்பட்டு இருந்த பழுதடைந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் லாரியில் ஏற்றப்பட்டு சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
     இதில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சாந்தி, உதவி ஆட்சியர் முகமது அஸ்லாம், தேர்தல் வட்டாட்சியர் பூஷன்குமார், கோட்ட ஆயஅலுவலர் தணிகாசலம் மற்றும் அரசு அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai