கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காந்தி சாலையில் உள்ள பழைமை வாய்ந்த ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீவெங்கட்ரமண சுவாமி திருக்கோயிலில் கருடசேவை பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, விடியல் காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பிறகு மாலை ஸ்ரீ வெங்கட்டரமண சுவாமி கருட வாகனத்தில், திருவீதி உலா வந்தார்.
உடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி வந்தனர். இது ஊத்தங்கரை மக்களுக்கு புதிய அனுபவத்தையும், மகிழ்வையும் தந்தது. இரவு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ வெங்கட்டரமண பெருமாளை தரிசித்தனர். விழாவக்கான ஏற்பாடுகளை நிர்வாகக் குழுத் தலைவர் செ.இராஜேந்திரன், துணைத் தலைவர் இரா.ரவிச்சந்திரன், செயலர் கோ.ரவிச்சந்திரன், துணைச் செயலர் சேகர், பொருளர் கே. திலீப்குமார், தர்மகர்த்தா பெ.பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்தனர். கருடசேவை நிரந்தரக் கட்டளைதாரர் பட்டாபி செட்டியார் விழாவை முன்னின்று நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.