பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) பா.சரவணன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: கிருஷ்ணகிரி வட்டாரத்தில் தற்போது பரவலாக மழை பெய்துள்ளதாலும், நடப்பு காரிப் பருவத்தில் நிலக்கடலை, நெல், பயறு வகை பயிர்கள், உணவு தானியப் பயிர்கள், கரும்பு பயிரிட ஏதுவான காலமாக இருப்பதாலும், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் குறைந்த பிரிமியத் தொகையில் அதிக காப்பீடு தொகை கிடைப்பதால், இயற்கை இடர்பாடுகள் கண்டு பயமின்றி பயிர் செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இந்தக் காப்பீட்டுத் திட்டம் தொடர்பாக விவசாயிகள் கிருஷ்ணகிரி வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை அணுகலாம். புயல், மண் சரிவு, வெள்ளம் போன்ற உள்ளூர் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் இழப்பு போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பைத் தவிர்த்து, விவசாயிகள் பயனடையும் நோக்கில் வேளாண் துறை மிகுந்த கவனம் கொண்டுள்ளது. அதன்படி, காரிப் பருவத்துக்கு ஏக்கர் ஒன்றுக்கு நெல்லுக்கு ரூ.535, நிலக்கடலைக்கு ரூ.296, ராகிக்கு ரூ.181 பிரிமியத் தொகையினை அருகில் உள்ள அரசு வங்கிகளிலோ அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.