கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பணிகள் குறித்து சிறப்பாசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பணிகள் குறித்து சிறப்பாசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட மாற்றுத்திறன் மாணவர்களை முறையான அரசுப் பள்ளிகள், சிறப்புப் பள்ளிகள், வீட்டு வழி கற்றல், ஆரம்பக் கால பயிற்சி மையங்கள், பகல் நேர பராமரிப்பு மையங்கள் ஆகியவற்றில் சேர்த்திட வேண்டும். சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளி, மையங்களில் பேச்சுப்பயிற்சி, வாழ்வியல் திறன் பயிற்சி, பிசியோதெரபி ஆகியவற்றை அளிக்க வேண்டும். அத்துடன், அரசு நலத்திட்ட உதவிகளான கல்வி உதவித்தொகை, மாத பராமரிப்புத் தொகை ஆகியவை மாற்றுத்திறன் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உதவ வேண்டும்.
மேலும், 2017-18-ஆம் கல்வியாண்டில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், விழிப்புணர்வு பேரணி, உதவி உபகரணங்கள், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, இலவச அறுவை சிகிச்சை மேற்கொள்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.