குடும்பத் தகராறில் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்துக் கொண்ட மனைவி உயிரிழந்தார். கணவர் படுகாயமடைந்தார்.
சந்தூரை அடுத்த சவுளுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் மனைவி வித்யா (26). இவர்களுக்கு அர்ஷிதா (6) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வித்யா சங்கத்தில் கடனாக பெற்ற பணத்தை தொழில் தொடங்க ரமேஷ்குமார் கேட்டுள்ளார். அதற்கு வித்யா மறுக்கவே கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வித்யா மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டாராம்.
வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிட, வெளியில் இருந்து வந்த ரமேஷ்குமார் கதவை உடைத்து தீயை அணைத்து மனைவியைக் காப்பாற்ற முயற்சித்தார். ஆனால் அவரையும் தீ பற்றிக்கொண்டதால் கணவன்-மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வித்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.