போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கட்டப்படும் பயிற்சிக் கூடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பர்கூர் முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் ஜெயபால் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சக்கரை வரவேற்றார்.
மாநில சம வளர்ச்சி நிதி திட்டம் நிதியில் இருந்து சுமார் 45 லட்சத்தில், சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் கட்டப்படும் இப் பயிற்சிக் கூடத்துக்கு பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் அடிக்கல் நாட்டினார். இதில் பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பயாஸ் அகமது, சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் செல்வம், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.