கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு, நீட் தேர்வுக்கு எதிரான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் இ.ஜி.சுகவனம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் மாவட்ட அவைத் தலைவர் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ, மாநில மகளிர் அணி தலைவர் காஞ்சனா கமலநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்தரங்கில், இந்தி திணிப்பு எதிர்ப்பு என்ற தலைப்பில், திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா பேசியது:
தமிழ் மொழியை 500 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இந்தி மொழி ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. இந்தி படித்தவர்கள் அனைவருக்கும் மட்டுமே வேலைவாய்ப்பு உள்ளது என்றும் ஒரு மாயை உள்ளது. நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை. இந்தியைத் திணிக்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம். நீங்கள் ஆதரவு கொடுத்தால் தமிழ் மொழியையும் ஆட்சி மொழியாகக் கொண்டு வருவோம் என்றார்.
நீட் தேர்வு ஏன் வேண்டாம் என்ற தலைப்பில் திமுக சட்டத் துறை இணைச் செயலளார் பரந்தாமன் பேசியது: நீட் தேர்வு என்பது தேசிய அளவிலான ஒரு நுழைவுத்தேர்வு ஆகும். ஆனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே மாதிரியான கல்வி இருக்கிறதா?
உணவில் மாற்றம், உடையில் மாற்றம், கல்வியில் மாற்றம் என அனைத்திலும் மாற்றம் இருக்கும் போது, எப்படி இது போன்ற தேர்வை ஏற்க முடியும். நீட் தேர்வை திமுக ரத்து செய்தததன் மூலம் 2009 முதல் 2016 வரை ஏராளமான கிராமப்புற மாணவர்கள் மருத்துவம், பொறியியல் படிப்பு படித்தனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.