போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூரில் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில் 10-ஆம் ஆண்டு அக்னி வசந்த விழா கடந்த 1 -ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.
தொடர்ந்து 21 நாள்களும் பெருங்கட்டூர் ஜெயபாலன், சேகர் ஆகியோர் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தினர். இதில் முடிவாக கடந்த 21 -ஆம் தேதி குருஷேத்திர துரியன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பிற்பகல் தீமிதித் திருவிழா விழா, தருமர் பட்டாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பண்ணந்துர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.